நண்பர்களுடன் தென் அமெரிக்க சுற்றுப்பயணத்தை அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி மேற்கொண்டோம். மாலை சுமாராக ஐந்தரை மணி அளவில் மயாமி(Miami) நகர விமான நிலையத்தில் இருந்து பெரு(Peru)வின் தலைநகரான லிமா(Lima)விற்கு புறப்பட்டோம். இரவு 10 மணி
அளவில் லிமாவில் விமானம் தரையிறங்கியது.
விமான கூடத்திற்கு அருகில் உள்ள ஹோட்டலில் ( ஹோட்டல் delsol ) தங்கினோம். லிமா நகரம்
பெருவின் மேற்கு பகுதியில் பசிபிக் கடற்கரையோரம் உள்ளது.
சுற்றிப்பார்க்க வாய்ப்புக் கிடைக்க வில்லை. காலையில் அங்கிருந்து பெருவின் கிழக்கே உள்ள கூஸ்கோ(Cusco) நகருக்கு பயணத்தை தொடர்ந்தோம். ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு விமானம் கொட்டும்
மழையில் கூஸ்கோ நகரை அடைந்தது. இன்கா பேரரசின்(Inca Empire) வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு
பழைய நகரம் ஆகும் . கூஸ்கோ நகரம்
கிட்டத்தட்ட 11000 அடி உயரத்தில் மலைஉச்சியில் மற்றும்
பள்ளத்தாக்கு முழுவதும் பரவி கான்கிரீட் மற்றும் மண் வீடுகள் தொகுப்பு போல
காட்சியளித்தது.
11000 அடி உயரத்தில் காற்று மெல்லியதாகி பிராணவாயு குறைந்து இருப்பதால்
வேகமாக நடந்தால் மூச்சு வாங்கும்.
இதை குறைப்பதற்கு கோகா (coca)
என்ற செடியின் உலர்ந்த இலைகளை வெந்நீரில் இட்டு
கோகா தேநீராக இங்கு குடிப்பது வழக்கம். வழிகாட்டி எங்களை பயணஊர்தியில் நகர வீதிகளில் அழைத்து சென்றார். கல் மற்றும் கான்கிரீட் சாலையின் இருபுறமும் அடுக்கப்பட்ட வீடுகள். கூரை
இல்லாமல் அங்கு பல இரண்டு மற்றும் மூன்று மாடி வீடுகள் . நகர வரி செலுத்துவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு என்று வழிகாட்டி
விளக்கினார் . நகரின் முக்கிய சதுக்கத்தில் உள்ள ஒரு
பாரம்பரிய பெருவியன் உணவகத்தில் மதிய உணவு.
காற்று குளிர் மற்றும் பனி கலந்த மழையால் நகர சதுக்கம் பளபளத்தது. சதுக்கத்தின் நடுவே ஸ்பானிய்ர்களால் கட்டப்பட்ட முக்கிய ஒரு பாரிய
கதீட்ரலை பார்க்க முடியும். இன்கா(Inca) சூரியன் கோயிலை(Sun Temple) இடித்து, அதன் அடித்தளத்தின் மேலே இந்த
கதீட்ரல் ஸ்பானியர்களால் கட்டப்பட்டுள்ளது.
அடுத்து இன்காவின் புனிதப் பள்ளத்தாக்கில்(Sacred Valley) எங்கள் பயணம் தொடர்ந்தது. உருபாம்பா(Urubamba) என்ற ஆற்றின் பகுதியே புனிதமான இடமாகக் கருதப்பட்டது.
வழியில் அவானகாஞ்ச என்ற இருப்பிடத்தை அடைந்தோம். இங்கு பாரம்பரிய ஆண்டியன்(Andean) இன்கா மக்களின் நெசவு, கைவினை பொருட்கள் செய்யும் முறைகளைப் பார்க்க முடிந்தது.
பெருவில் குறிப்பாக ஆண்டியன் மலைத்தொடர்களில் பல் வேறு வகையான உருளைகிழங்குகள் மற்றும் பல நிறங்களான
சோளம் விளைகிறது. இதுதான் உருளைகிழங்குகளின்,சோளத்தின் பிறப்பிடம். இங்குள்ள இலமாஸ்(Ilamas) ,அல்பக்காஸ்(Alpacas) நம்மூர் பெரியசெம்மறி ஆடுகளைப் போன்றுள்ளது.
உடல் உணவுக்கும், முடி துணி நெய்வதற்கும் பயன்படுகிறது. புனிதப் பள்ளத்தாக்கில் அரான்வா என்ற ஒரு ஹோட்டலில் தங்கினோம். இது மலை மற்றும் அழகிய இயற்கை சூழலில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி.
உடல் உணவுக்கும், முடி துணி நெய்வதற்கும் பயன்படுகிறது. புனிதப் பள்ளத்தாக்கில் அரான்வா என்ற ஒரு ஹோட்டலில் தங்கினோம். இது மலை மற்றும் அழகிய இயற்கை சூழலில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி.
மறு நாள் சின்செரோ(Chinchero) என்ற ஆண்டியன் ஊருக்கு சென்றோம். கல் வேயப்பட்ட சுத்தமான தெருக்கள். நடுவே சாக்கடை வெளியேற நீண்ட வாய்க்கால். பார்த்தவுடன் தோன்றியது ஏன் நம்மூரில் தமிழ் நாட்டில் இது மாதிரி இல்லை என்ற ஆதங்கம்.
ஆண்டிய பெண்கள் கம்பளியை இயற்கை சோப்பு கற்றாழையை பயன்படுத்தி துவைப்பது, பூஞ்சை பயன்படுத்தி சாயமிடுவது போன்ற செயல் முறைகளை காண்பித்தார்கள்.
அடுத்து Moray என்ற இடத்திற்கு அருகே சுண்ணாம்பு கற்கல் மிகுந்த
பகுதியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கிற்குச் சென்றோம்.
சில நூறு அடிகளுக்கு கீழே பெரிய வட்ட
மற்றும் அரை வட்டமாக கட்டப்பட்ட விவசாய மாடிகள்.
இது இன்காவின் தாவரவியல் ஆய்வு கூடமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்து மராஸ் என்ற ஊருக்கு அருகே உப்பு சுரங்கங்கள்
இருந்தது. இந்த
சுரங்கங்கள் ,
பள்ளத்தாக்கில் சிறு சிறு குளங்கள் தோன்றி மலைஉச்சியில் இருந்து பார்க்க ஆச்சரியமாக இருந்தது .
எங்கள் பேருந்து பயணம் தொடர்ந்தது. மற்றும் ஒரு இராணுவ, மத மற்றும் விவசாய மையமாக பயன்படுத்தப்பட்ட நகரம் ஒல்லண்டய்டம்போ (Ollantaytambo) வில் சில நேரங்கள் செலவிட்டோம். படையெடுப்பாளர்களிடம் இருந்து பள்ளத்தாக்கை பாதுகாக்க இன்காவினால் கட்டப்பட்ட ஒரு மலை மேல் கோட்டை. மீண்டும் விடுதியில் இரவை கழித்து, மாச்சு பிச்சுவிற்கானப் (Machu Pichu) பயணம் காலையில் ஆரம்பித்தது. ஒல்லண்டய்டம்போ (Ollantaytambo) ரயில் நிலையத்தில் Visdadome என்ற பரந்த கண்ணாடி ஜன்னல்கள் உள்ள மின் ஊர்தியில் பயணித்தோம்.
எங்கள் பேருந்து பயணம் தொடர்ந்தது. மற்றும் ஒரு இராணுவ, மத மற்றும் விவசாய மையமாக பயன்படுத்தப்பட்ட நகரம் ஒல்லண்டய்டம்போ (Ollantaytambo) வில் சில நேரங்கள் செலவிட்டோம். படையெடுப்பாளர்களிடம் இருந்து பள்ளத்தாக்கை பாதுகாக்க இன்காவினால் கட்டப்பட்ட ஒரு மலை மேல் கோட்டை. மீண்டும் விடுதியில் இரவை கழித்து, மாச்சு பிச்சுவிற்கானப் (Machu Pichu) பயணம் காலையில் ஆரம்பித்தது. ஒல்லண்டய்டம்போ (Ollantaytambo) ரயில் நிலையத்தில் Visdadome என்ற பரந்த கண்ணாடி ஜன்னல்கள் உள்ள மின் ஊர்தியில் பயணித்தோம்.
செல்லும் வழியில் அழகான இயற்கை வளம் சூழ்ந்த காட்சிகள்.
பார்க்க பரந்த ஜன்னல்கள். ஒரு மணி நேர பயணத்தின் பின் காலின்ட்ஸ் என்ற சிறு நகரை அடைந்தோம்.
எல் மாபி என்ற ஹோட்டலில் பெட்டிகளை வைத்து விட்டு, மாச்சு பிச்சுவை பார்வையிட மலை மீது ஒரு பஸ்சில் அரை மணி நேரம் பயணித்தோம். மலை உச்சியில் ஒரு பதினைந்து நிமிடங்கள் நடந்து
சென்றால் மாச்சு பிச்சுவின் அழகிய தோற்றம் எங்கள் முன்னே காட்சியளித்தது. மாச்சு பிச்சு மேகம் தவழ பசுமையான காடுகளால் சூழப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மாச்சு பிச்சு பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இன்கா பேரரசர் Pachacuti மூலம் சுமார் 1450 லில் கட்டப்பட்டது, ஆனால் ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு நேரத்தில் ஒரு நூற்றாண்டின் பின்னர் அது கைவிடப்பட்டது. இதன் வழிப்பாதைகளை அழித்து, ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு இல்லாமல் செய்து விட்டார்கள். இந்த நகரம் உள்நாட்டில் அறியப்படுகிறது என்றாலும், அமெரிக்க யேல் பல்கலைகழக வரலாற்றாசிரியர் ஹிரம் பிங்கம் மூலம் 1911 ஆம் ஆண்டு சர்வதேச கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் வெளி உலகத்திற்கு தெரியவில்லை.
கடல் மட்டத்தில் இருந்து 8000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் மாச்சு பிச்சு பொதுவாக "இன்காக்களில் தொலைந்த நகரம்" என அழைக்கப்பட்டு இன்கா பேரரசின் வரலாற்றுச் சின்னமாகக் கருதப்படுகிறது. இன்கா பேரரசர் Pachacuti மூலம் சுமார் 1450 லில் கட்டப்பட்டது, ஆனால் ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு நேரத்தில் ஒரு நூற்றாண்டின் பின்னர் அது கைவிடப்பட்டது. இதன் வழிப்பாதைகளை அழித்து, ஸ்பானிஷ் ஆக்கிரமிப்பு இல்லாமல் செய்து விட்டார்கள். இந்த நகரம் உள்நாட்டில் அறியப்படுகிறது என்றாலும், அமெரிக்க யேல் பல்கலைகழக வரலாற்றாசிரியர் ஹிரம் பிங்கம் மூலம் 1911 ஆம் ஆண்டு சர்வதேச கவனத்திற்கு கொண்டு வருவதற்கு முன்னர் வெளி உலகத்திற்கு தெரியவில்லை.
மாச்சு பிச்சு இன்கா காலத்தைய கட்டிட கலைக்கு சான்றாக அமைந்துள்ளது. கருங்கல் கற்களைக் கொண்டு
கட்டப்பட்ட பளபளபாக்கப்பட்ட சுவர்களையும்,கற்களுக்கு இடையே இடைவெளி இல்லாமலும் உள்ளது. இங்குள்ள "இன்டிகுவாட்டானா" என்ற சூரியனுக்கு கட்டப்பட்ட ஒரு கோயில் இதன் முக்கிய
பகுதியாகும்.
இங்குள்ள மலைத்தொடர்கள் காண்பதற்கு அழகாக, 2௦௦௦ அடிகள் செங்குத்தாக உள்ளது. மலைத்தொடர்களின் அடியில் உருபாம்பா(Urubamba) ஆறு வளைந்து,நெடுகி ஓடுகிறது. மாச்சு பிச்சுவை யுனெஸ்கோ புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.
மாச்சு பிச்சுவின் பயணத்தை முடித்து கொண்டு திரும்பவும் கூஸ்கோ நகரத்திற்கு திரும்பினோம். அன்றிரவு டான் அந்தோனியோ உணவகத்தில் ஆண்டியன் கிராமிய இசையை நடனங்களைக் கண்டு களித்தோம். மறு நாள் நகரின் வெளிப்புறத்தில் அமைந்துள்ள சாக்சய்ஹோமன் கோட்டையைப் பார்த்தோம். இன்காவின் கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டாக இது பெரும் கருங்கல் கொண்டு அமைக்கப்பட்ட அரணாகும்.
அன்று மாலை கூஸ்கோ நகரில்,கொரிகாஞ்ச என்ற சூரியகோயில் அடித்தளத்தில் மேல் கட்டப்பட்ட அரண்மனையைப் பார்த்தோம். இன்கா காலத்திய சூரிய கோயிலின் அடித்தளம் இந்த அரண்மனையில் இருப்பது அண்மையில் நடந்த ஒரு நிலவதிர்விர்க்குப் பின்னால்தான் தெரியவந்தது.
நகரின் மையப்பகுதியில் உள்ள சதுக்கததையும், அதன் அருகே
ஒரு பாரிய கதீட்ரலின் உள்ளே சென்று பார்த்தோம்.
தங்கத்தகடுகள் வேய்ந்த சிற்பங்கள் இந்த மாதா கோயிலின்
பீடத்தை அலங்கரிக்கிறது. இன்கா காலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தைக்கொண்டே ஸ்பானியர்களால் இது கட்டப்பட்டுள்ளது.
கூஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு அடுத்த நாள் காலை லீமாவிற்கு புறப்பட்டோம். அங்கிருந்து அர்ஜென்டினியாவின் புநோஸ்சரஸ்(Buenos Aires) நகருக்கு விமானம் மூலம் ஐந்து மணிநேரம் பயணித்தோம். புநோஸ்சரஸ் ஒரு அழகிய நகரம் . தென் அமெரிக்காவின் பாரீஸ் என்றழைக்கப்படுகிறது .
நகரின் நடுவே உள்ள ரிகோலேட(Recoleta),அருகே உள்ள இடுகாடில்தான் ஈவா பெரோனின்(Eva Peron) சமாதி உள்ளது. நகரின் பல பகுதிகளைப் பார்த்துவிட்டு. இரவு உணவுடன்,தாங்கோ(Tango) என்ற நடன/நாடக நிகழ்ச்சியையும் கபே தேலோஸ் அன்ஜெலிடோசில்(Cafe de los angeliotos) கண்டு களித்தோம்.
அடுத்த நாள் இகுஆஸ்சு(Iguassu) நீர்வீழ்ச்சியைக் காண விமானப்பயணத்தை தொடர்ந்தோம். இகுஆஸ்சு விமான நிலையம் அர்ஜெண்டினா/பிரேசில்/பராகுஅய்(Argentina/Brazil/Paraguay) எல்லைப்பகுதியில் உள்ளது. எல்லையைக் கடந்து பிரேசில் பக்கம் சென்று இகுஆஸ்சு நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம். உலகில் உள்ள மிகப்பெரிய நீர் வீழ்ச்சிகளில் இதுவும் ஓன்று. பிரேசிலியன் தூபி குர்னாணி(Tupi-Gurnani) மொழியில் இகுஆஸ்சு என்றால் பெரிய ஆறு என்று பொருள். இரு நூற்றுக்கும் மேற்பட்ட தனித்தனியான வீழ்ச்சிகள் இதில் அடங்கும். நீர் அடர்த்தியில் உலகிலேயே பெரியது. பல இடங்களில் நின்று நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசித்தோம்.
மறு நாள் பிரேசிலின் எல்லையைக் கடந்து,அர்ஜென்டினியன் பகுதியான தேசிய பூங்காவிற்கு சென்றோம். குட்டிரயிலில் பயணம் செய்து,பின் ஒரு முப்பது நிமிடங்கள் ஆற்றின் மேலே பாலத்தில் சென்று, டெவில்ஸ் த்ரோட்ஸ்,அர்ஜென்டினியன்,சான் மார்டின் நீர் வீழ்ச்சிகளைகளைப் பார்த்தோம். நானூறு அடிகள் கீழே இறங்கி,வேகப்படகுகலில் ஏறி,நீர்வீழ்ச்சிகளின் உள்ளே மிகவும் வேகமாக பயணம் செய்தோம்.
மறு நாள் இகுஆஸ்சு விமான நிலையம் சென்று, ரியோடிஜெனீராவிற்கு (Rio de Janeiro) கிளம்பினோம். இரண்டு மணி நேரப்பயணம். ரியோவில் கோபகபான(Copagabana) கடற்கரையில் உள்ள வின்ட்சர் அட்லாண்டிக் ஹோட்டலில் தங்கினோம். ரியோ கடலுக்கும், மலைகளுக்கும் இடையே அமைந்துள்ள ஒரு அழகிய நகரம். அறுபது லட்சம் மக்கள் இங்கு வாழ்கிறார்கள். ஹோட்டலின் முப்பதாவது மாடியில் இருந்து கடற்கரையும்,அட்லாண்டிக் கடலும் மிக அழகாக இருந்தது.
கோபகபான கடற்கரையின் அருகே இப்பநீமா(Ippanema) கடற்கரையும் உள்ளது. அக்டோபர் மாதம் இங்கு இளவேணி காலமானதால் கடற்கரையில் கூட்டமில்லை. அன்றிரவு ப்ளாடபோர்ம நிகழ்ச்சியைப் (Plataforma show)பார்த்தோம். ப்ளாடபோர்ம நிகழ்ச்சி பிரேசில் மக்களின் கலப்பின கலாச்சாரத்தை(போர்த்துகீஸ்,இந்திய,ஆப்ரிக்கன்) பிரதிபலித்தது.
மறு நாள் பல்சக்கர ரயிலில் கார்கோவடோ(Corcovado) மலை மீது சென்று,வெப்ப மண்டல வனங்களையும் தாண்டி மலையுச்சியில் கிறிஸ்ட் தி ரெடீமர்(Christ the Redeemer) சிலையை பார்த்தோம். சிலையின் தலைப்பாகத்தில் மேகம் மூடிருந்ததால் தெளிவாக பார்க்கமுடியவில்லை.
மலையுச்சியில் இருந்து ரியோ நகரம் எல்லா திசைகளிலும் அழகாக தோற்றமளித்தது. மறு நாள் கேபிள் கார் மூலம் சுகர் லோப் மலைகளின் உச்சிக்கு சென்று ரியோவின் வானவூடான காட்சிகளைகண்டு களித்தோம்